இருசக்கர வாகனத்தில் 2 பேர் சென்றால் வாகனம் பறிமுதல்.!

நாளை முதல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் . 2 பேர் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை காட்டிலும், குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று, தமிழகத்தில் 64 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டது. 60 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் 1885 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1020 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் தங்கமணி நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கொரோனா தடுப்பு பணியில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. நாளை முதல் அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் . 2 பேர் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு மின்உற்பத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025