ஹாலிவுட் படத்தை மிஞ்சும் கார் திருட்டை அமெரிக்காவில் நிகழ்த்திய 19 சிறுவர்கள்

திரைப்படத்தை மிஞ்சும் ஒரு கார் திருட்டு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது .இதை நிகழ்த்தியவர்கள் 19 சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
அமெரிக்காவில் வட கரோலினா என்ற மாநிலத்தில் ஒரு கார் திருட்டு ஒன்றல்ல 47 கார்கள் திருடப்பட்டுள்ளது .இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .ஏன் ? இவ்ளோ பரபரப்புக்கு காரணம் என்றால் அதை நிகழ்த்தியவர்கள் 9 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 19 சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .இவர்கள் திருடப்பட்ட கார்களின் எண்ணிக்கை 47 அதன் மதிப்பு சுமார் $1,138,718 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 8 கோடியாகும் .இதுவரை 6 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
வட கரோலினா மாநில காவல்த்துறை தெரிவிக்கையில் இந்த திருட்டில் 19 சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வயது 9 முதல் 16 வயதுடையவர்கள். இதுவரை 18 முறை திருட்டில் ஈடுபட்டுள்ளனர் .சில நிறுவனங்களில் இரண்டு முறை தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் .இவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் இவர்களை கைது செய்ய முடியாது.
ஆனால் இவர்களில் ஒருவன் 19 வயதுடையவன் என்பதால் அவன் கைது செய்யப்பட்டுளான் அவன் மீது வழக்கு பதியப்பட்டு 20,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான் .மற்ற சிறுவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த கார் திருட்டு பாஸ்டன் பியூரியஸ் படத்தை மிஞ்சும் அளவுக்கு இவர்கள் நிகழ்த்தியுள்ளனர் ,வல்லரசு என மார்தட்டும் அமெரிக்கா ஆயுதம் சேர்ப்பதில் குறியாய் இருக்கும் நேரத்தில் தன் நாட்டு மக்களுக்கு தேவையான மருந்து ,உணவு ,கல்வி இவற்றில் கவனம் செலுத்தினால் அதுதான் உண்மையான வல்லரசு என்பதில் மாற்றுயில்லை .
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025