அறிகுறிகள் இல்லாமல் கொரோனா உறுதியானவர்களுக்கு சிறப்பு பெட்டகம் வழங்கப்படும் ! – விஜயபாஸ்கர்

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா உறுதியானவர்களுக்கு சிறப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில், இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் 2 பேர் மற்றும் நெல்லையில் ஒருவர் என மொத்தம் 3 பேர் இன்று கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் 80% பேருக்கு கெரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா உறுதியானவர்களுக்கு சிறப்பு பெட்டகம் வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என சுகாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். அந்த பெட்டகத்தில் கபசுர குடிநீர், ஜீங் மற்றும் சத்து மாத்திரை, ஹேண்ட் சானிட்டைசர், சோப்பு அடங்கியுள்ளதாக விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025