காயமடைந்த காவலர்களுக்கு நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் காயமடைந்த காவலர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார் .
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ளார் அறிக்கையில்,திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இத்தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ,அவரவர் மாநிலங்களுக்கு , அம்மாநில அரசின் முறையான அனுமதியுடன் ,படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.தமிழ்நாட்டிலிருந்து இதுவரை சுமார் 13,000 வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் கடந்த 9-ஆம் தேதியன்று அணுமின் நிலைய வாயில் அருகில் வெளிநாமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு உடனடியாக செல்லவேண்டும் என்று கோஷமிட்டனர்.அவர்களிடம் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துக்கூறி கலைந்து செல்ல காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.ஆனால் சில தொழிலாளர்கள் கலைந்து செல்ல மறுத்து,காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டதில், கூடங்குளம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதா மற்றும் காவல் வாகன ஓட்டுநர் சக்திவேல் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது.அதிகாரிகளின் தொடர் பேச்சுவார்தைக்குப் பின்னர் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.இந்நிகழ்வில் பலத்த காயமடைந்த காவலர் சக்திவேல் அவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும்,லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதா அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவரான நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025