பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ! 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,28,549 ஆக அதிகரித்துள்ளது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,08,645 ஆக உள்ளது. மேலும், 17,58,039 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழத்தவர்களை தவிர்த்து, தற்பொழுது மருத்துவமனையில் 25,58,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.அங்கு 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.37,218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.803 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.10,155 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025