மஹாராஷ்டிராவில் 37 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

மஹாராஷ்டிராவில் 37 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை இந்தியாவில், 106,750 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
மேலும், மஹாராஷ்டிராவில் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால், 1325 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025