#Breaking: திமுகவில் வி.பி.துரைசாமியின் பதவி பறிப்பு.!

திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி.துரைசாமியை நீக்கினார் மு.க ஸ்டாலின்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை நீக்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். வி.பி துரைசாமிக்கு பதிலாக அந்நியூர் செல்வராஜை திமுக துணை பொதுச்செயலாளராக நியமித்தார் மு.க.ஸ்டாலின். துரைசாமிக்கு மாநிலங்களைவை எம்.பி. பதவி கிடைக்காததால் பாஜகவுக்கு சேர திட்டமிட்டதாக தகவல் வெளியானது. தமிழகத்தின் பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், தற்போது வி.பி.துரைசாமியின் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய வி.பி.துரைசாமி, 3 நாளில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் திமுகவில் தொடர்ந்து இருப்பேன் எனவும் கூறியுள்ளார். அருகில் இருப்பவர்களின் பேச்சை கேட்டு தலைமை நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனது பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான், இதில் எந்த ஆச்சிரியமும் இல்லை என்றும் துணை பொதுச்செயலாளராக நியமனம் ஆன அந்நியூர் செல்வராஜிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025