சீரியல் நடிகை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர்.!

சீரியல் நடிகையான மேக்னா வின்சென்ட் கணவரான டான் டோமி விவாகரத்து கிடைத்த அடுத்த வாரத்திலேயே டிவைன் கிளாரா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மலையாள சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதே தொடர் சந்தனமழை என்ற பெயரில் உருவாக்கப்பட்டு அதிலும் இவரே நடித்திருந்தார். இந்த சீரியல் இந்தியில் ஒளிப்பரப்ப பட்ட சாத் நிபானா சாதியா என்ற தொடரின் ரீமேக்காகும்.
அந்த தொடரின் மூலம் பிரபலமான மேக்னா அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள் தொடரில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். அதனையடுத்து பிரபு சாலமனின் கயல் படத்திலும் நடித்தார் மேக்னா வின்சென்ட். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டோமி டான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டோமி டான் சீரியல் நடிகையான டிம்பிள் ரோஸின் சகோதரர் ஆவர்.
இந்த நிலையில் டான் டோமிக்கும், மேக்னா வின்சென்ட்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வந்தனர். அதனையடுத்து இவர்கள் இருவருக்கும் குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. மேலும் டான் டோமி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், விரைவில் திருமணம் இருக்க கூடும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இவரது கணவரான டான் டோமி விவாகரத்து கிடைத்த அடுத்த வாரத்திலேயே டிவைன் கிளாரா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை மேக்னா சற்றும் எதிர்பாராவில்லையாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025