திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்.!

திமுக சார்பில் வரும் 31 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் வரும் 31 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் பாஜக அரசு மற்றும் கொரோனா தடுப்பில் மத்திய – மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்குமுன் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது. முதற்கட்டமாக 1 லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய நிலையில், மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6 லட்ச கோரிக்கை மனுக்களை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் http://ondrinaivomvaa.in வில் வெளியிடப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம், 31-05-2020 அன்று, மாலை 4:30 மணிக்கு, காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
பொருள்: மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் பாஜக அரசு & கொரோனா தடுப்பில் மத்திய – மாநில அரசுகளின் செயல்பாடுகள்”
– தலைமைக் கழகம்.#DMK pic.twitter.com/HmOVCbFyyT
— DMK (@arivalayam) May 29, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025