கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறை.! சவுதி அரேபியாவுடன் இணைந்து ரஷ்யா சோதனை.!

கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது, விரைவில் சவுதி அரேபியாவுடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்.
நாடு முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு ஒரே வழி தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் என்று கூறி வல்லுநர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது என்றும் விரைவில் சவுதி அரேபியாவுடன் இணைந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ரஷ்யா தரப்பில் கூறுகையில், நாம் சவுதி அரேபியாவுடன் இணைந்து கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையைக் கையாள உள்ளோம். வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு Avifavir என்ற சிகிச்சை முறையைப் பயன்படுத்தும்போது அது நல்ல பலனை அளித்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியாவுடன் பேசி வருகிறோம்.
சவுதி அரேபியா இந்தப் புதிய சிகிச்சை முறையை இணைந்து சோதனை நடத்த ஆர்வமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவில் 4,05,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 4,693 பேர் பலியாகியுள்ளனர். சவுதி அரேபியாவில் 85,261 பேர் பாதிக்கப்பட்டு, 503 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025