பாரம்பரிய நாடக கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் – தமிழக அரசு!

நாடக கலைஞர்கள் மற்றும் நாடக கலைகுழுக்களுக்கு இசை கருவிகள், ஆடை, அணிகலன்கள் ஆகியவை வாங்குவதற்கு நிதி உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே அச்சத்தில் உள்ளது. சில இடங்களில் மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவிகள் செய்கின்றனர். ஆனால், நாடக கலைஞர்கள் மற்றும் நாடக கலைகுழுக்களுக்கு யாரும் ஏதும் வழங்குவதில்லை.
இந்நிலையில், இவர்களுக்கு ஆடை, இசைக்கருவிகள் மற்றும் அணிகலன்கள் வாங்குவதற்காக தமிழக அரசால் ரூ 5,000 வீதம் 100 கலைஞர்களுக்கும், கலைகுழு ஒவ்வொன்றுக்கும் ரூ10,000 வீதம் 100 கலைகுழுக்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025