2-ம் உலகப்போர் வெற்றி விழாவில் பங்கேற்ற இந்திய ராணுவம்.!

1945 -ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலக போரில் ரஷ்யா, ஜெர்மனியை தோற்கடித்தது. இதன், வெற்றியின் அடையாளமாக வெற்றி விழா கொண்டப்படுகிறது. இந்த அணிவகுப்பில் இந்திய ராணுவத்துடன் சேர்த்து 11 நாடுகளின் படைகளும் பங்கேற்றன. இந்த வெற்றி விழா ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்றது.
இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யா செய்த தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த வெற்றி விழா கொண்டப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது இந்திய வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த அணிவகுப்பு உள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனிக்கு எதிரான போரில் இந்திய வீரர்களும் கலந்துகொண்டனர். சுமார் 20 லட்சம் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இந்த வெற்றி அணிவகுப்பில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க மாஸ்கோ சென்றுள்ளார்.
இந்த அணிவகுப்பில் 75 இந்திய ராணுவ வீரர்களும், இந்திய ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தியாவின் நட்பு நாடுகளின் பட்டியலில் ரஷ்யா உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025