சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸின் அழகிய மகள்.! சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் புகைப்படங்கள்.!

Default Image

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸின் அழகிய மகள் எமிராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அப்பாஸ். அதனையடுத்து பட வாய்ப்புகள் தேடி வர, விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார். கடைசியாக ராமானுஜம் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் உட்பட மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் 1999-ல் எரும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அய்மான், எமிரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நியூசிலாந்து சென்று குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். இந்த நிலையில் தற்போது அவரது 21 வயதான மகள் எமிராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பார்ப்பதற்கு ஹீரோயின் ரேன்ஜில் உள்ள எமிராவின் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் சினிமாவில் எப்போது அறிமுகமாக போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்