பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்க கே.எஸ். அழகிரி தயாரா?

தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ்.அழகிரி தயாரா என பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பினார்.
தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக தலைமை அலுவலகமான கமலாயம் செயல்படும் இடம் மக்கள் வசிக்கும் பகுதி. அங்கு கட்சி அலுவலகம் அமைத்ததால் மக்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது எனவும், 30 கோடிரூபாய் மதிப்புள்ள அந்த கமலாலயம் கட்டிடத்தை திரு முக்தா சீனிவாசன் அவர்களை எப்படி மிரட்டி வெறும் ரூ. 3 கோடிக்கு வாங்கினார்கள் எனவும்,
அனைத்து மாவட்டத்திலும் பாஜகவிற்கு அலுவலகம் கட்ட இடம் வாங்கியதாகவும், அதற்கான பணத்தை எங்கு வசூல் செய்தீர்கள்..? அதற்கான அத்தாச்சி உங்களிடம் உள்ளதாக என தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் முருகன், தமிழக பாஜக தலைமை அலுவலகம் செயல்படும் இடத்தை ரூ.30 கோடி மதிப்புள்ளதென்றும் அதை ரூ.3 கோடிக்கு மிரட்டி வாங்கினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய விலையையும், இப்போது இருக்கிற சந்தை மதிப்பையும் ஒன்றுபடுத்தி பேசியிருப்பது அவர் எத்தகைய குழப்பத்தில் இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அவர் குறிப்பிட்டுள்ள படியே ரூ.30 கோடிக்கு நாங்கள் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். அவர் வாங்கிக் கொள்ள தயாரா..? என தெரிவித்துள்ளார்
தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ்.அழகிரி தயாரா?@Murugan_TNBJP @KS_Alagiri @INCIndia @JPNadda pic.twitter.com/1cChnhIw0o
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) July 21, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025