கொரோனாவால் உயிரிழந்த பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர்.!

கொரோனாவால் பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் காலமானார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த கொரோனா தொற்றால் பல அரசியல் தலைவர்களும் உயிரிழந்துள்ளதும், சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பீகாரின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சுனில் குமார் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் காலமானார்.
66 வயதான சுனில் சிங் கடந்த ஜூலை 13-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், இவர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகள் மற்றும் மனைவி உள்ளனர். தற்போது முதலமைச்சர் நிதிஷ்குமார், அவரது துணை அமைச்சர் சுஷில் குமார் மோடி, பீகார் சட்டமன்ற கவுன்சில் செயல் தலைவர் அவதேஷ் நாராயண் சிங் மற்றும் பல தலைவர்கள் சுனில் சிங்கின் மரணத்திற்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து சட்டமன்ற சபை செயல் தலைவர் உட்பட பீகாரின் 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீகாரில் கொரோனாவால் இறந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025