உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையம்.. காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த பிரதமர்!

மும்பை, கொல்கத்தா, நோய்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, இம்மாத இறுதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆயினும், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தநிலையில் மும்பை, கொல்கத்தா, நோய்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதனை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த மையங்கள் மூலம் ஒரு நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதிக்க முடியும் எனவும், அதன் முடிவுகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.