சச்சினால் இதை செய்யமுடியாது- கபில் தேவ்.!

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினை பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிடிக்காத மக்கள் யாரும் இருக்கமாட்டார்கள், சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்கள் குவித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்
சச்சின் மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளார். மேலும் சச்சின் கடந்த 2012 ஆம் ஆண்டில் வங்காளதேசத் அணிக்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் குவித்த போது சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.
மேலும் இந்த நிலையில் தற்பொழுது சச்சினை பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சில விஷயங்களை கூறினார் அதில் முக்கியமாக “சச்சினிடம் நிறைய தனி திறமை உள்ளது. மேலும் அவருக்கு எப்படி சதம் அடிக்க வேண்டும் என்பது மிகவும் நன்றாக தெரியும். அவருக்கு சதத்தை எப்படி 200, 300ஆக மாற்ற வேண்டும் எனத் தெரியாது.” என்றார் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய கபில் தேவ் “சச்சின் மூன்று முச்சதங்கள், இன்னும் 10 இரட்டை சதங்கள் அடித்து இருக்கலாம். ஏனெனில், அவரால் வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்களின் ஒவ்வொரு ஓவர்களிலும் ஒரு பவுண்டரி அடிக்க முடியும்” என்றும் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025