மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி!

மதுரை மேற்கு தொகுதியின் அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலக அளவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் என யாரையும் விட்டுவைக்காமல் தொடர்ச்சியாக தாக்கிக் கொண்டே தான் உள்ளது கொரோனா. இந்நிலையில் நேற்று தான் திமுக எம்எல்ஏக்கள் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தின் மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் குமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழக எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025