1, 6, 9 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடக்கம்.? பள்ளி கல்வித்துறை தகவல்.!

17-ம் தேதி முதல் 1,6,9 -ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தகவல்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிழும் வரும் 17-ம் தேதி முதல் 1,6,9 -ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார். இதற்கிடையில் நாளை நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கையில் பள்ளிக்கு வரும்பொழுது மாணவர்களும், பெற்றோர்களும் சமுக இடைவெளியுடன் முககவசம் அணிந்து நெறிமுறைகளை பின்பற்றி சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் வெளியிட்ட அரசாணையில், 11 -ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை, வரும் 24 -ம் தேதி முதல் நடைபெறும் எனவும், ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சேரும் 2 முதல் 10 -ம் வகுப்பு மாணவர் சேர்க்கை, 17 -ம் தேதி முதல் தொடங்கும் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025