#BREAKING: அமெரிக்காவில் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்.!

பிரபல கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் காலமானார். இவரது மரணத்திற்கு காரணம் இன்னும தெரியவில்லை. இவரது மரண செய்தியை இவரது மகள் துர்கா ஜஸ்ராஜ் தெரிவித்தார். பண்டிட் ஜஸ்ராஜிக்கு 90 வயது. அவர் ஜனவரி 28, 1930 இல் பிறந்தார். இந்தியாவின் பிரபல கிளாசிக்கல் பாடகர்களில் ஒருவர் ஜஸ்ராஜ்.
அவரது தந்தை பண்டிட் மோதிராம் இறந்தபோது ஜஸ்ராஜுக்கு நான்கு வயது, அவர் மூத்த சகோதரர் பண்டிட் மணிராமின் ஆதரவின் கீழ் வளர்க்கப்பட்டார். இசையில் ஜஸ்ராஜ் 80 ஆண்டுகளுக்கும் மேலாக செலவிட்டார். மேலும், பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது இசை வாழ்க்கையில் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, கனடா மற்றும் அமெரிக்காவில் ஜஸ்ராஜ் இசை கற்றுக் கொடுத்துவந்துள்ளார். அவரது சீடர்களில் சிலர் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களாகவும் மாறிவிட்டனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியிலும் அவருக்கு ஒரு வீடு உள்ளது. அவரது இசைப் பள்ளியும் அங்கு இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!
July 25, 2025
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!
July 25, 2025
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!
July 24, 2025
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025