உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ‘சமோசா’ வாங்க வெளியே சென்று வீடு திரும்பவில்லை என்று காவல் துறை தெரிவித்தனர்.
இறந்தவர்களில் மஹுவா பாட்டியாட் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் அங்குல் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.மீட்கப்பட்ட இரு சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து ஆகாஷின் தந்தை ராகேஷ் கமல் கூறுகையில், “எனது மகனும், அங்குலும் மிக நெருங்கிய நண்பர்கள். அவர்கள் ‘சமோசா’ வாங்குவதற்காக சென்றபோது நல்லாதான் இருந்தார்கள் என்று கூறிய அவர் இது குறித்து காவல்துறையினர் விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025