சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல்.!

உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முக ஸ்டாலின்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த லட்சுமணன், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் இவரின் மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடப்படுகிறது. நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்தவர். மேலும், பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து துயரடைந்தேன். உச்சநீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பது உட்பட புகழ்மிக்க பல பரிந்துரைகளையும், தீர்ப்புகளையும் வழங்கியவர் என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபமும், இரங்கலும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து சொல்லொணாத் துயரடைந்தேன்!
உச்சநீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பது உட்பட புகழ்மிக்க பல பரிந்துரைகளையும், தீர்ப்புகளையும் வழங்கியவர்!
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபமும், இரங்கலும்! pic.twitter.com/7ekrVYEkEy
— M.K.Stalin (@mkstalin) August 27, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025