உ. பி-யில் 18வயது சிறுமியை கடத்தி விற்க முயன்ற 4 பேர் .!

உத்தரபிரதேசத்தில் 18வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து கடத்தி விற்க முயன்றுள்ளனர்.
உத்திரப் பிரதேசத்தில் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணத்திற்காக நான்கு பேர் கடத்தி சென்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி சீக்கிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 18 வயது சிறுமியை 1 ஆண் மற்றும் 3 பெண்கள் இணைந்து கடத்தியுள்ளனர். சிறுமிக்கு போதை பொருள் கொடுத்து கடத்தியதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து கடத்தப்பட்ட சிறுமியை ஹரியானாவின் பானிபட்டில் உள்ள ஒரு வீட்டில் பிணை கைதியாக வைக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து சிறுமி மயக்கத்தில் இருந்து தெளிந்த பின்னர் அவ்விடத்திலிருந்து தப்பித்து பெற்றோரிடம் சேர்ந்ததாக குழந்தை பராமரிப்பு ஹெல்ப்லைன் அதிகாரி பூனம் சர்மா தெரிவித்துள்ளார். அதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் ஆகஸ்ட் 22-ஆம் தேதி குழந்தை பராமரிப்பு ஹெல்ப்லைனை அணுகி புகார் அளித்ததை அடுத்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து நடந்த விசாரணையில் கரம் வீர், சரோஜ், ராதிகா மற்றும் பூஜா ஆகியோர் சிறுமியை வேறொருவருக்கு பணத்திற்கு விற்க முயன்றது தெரிய வந்தது. அதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025