கடந்த 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் கொரோனாவால் 5 காவல்துறையினர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் கொரோனாவால் 5 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரை குறைந்தபாடில்லை. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவல்துறையினர் மருத்துவர்களுக்கு தான் இந்த கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 5 காவல்துறையினர் கொரானா வைரசால் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 424 புதிய வழக்குகளும் பதிவாகி உள்ளது. இதனால் 16,015 காவல்துறையினர் மொத்தம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 2,838 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், பலர் குணமடைந்துள்ளனர் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025