நாளை முதல் கொடைக்கானலை சுற்றி பார்க்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி.!

கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதி வழங்கி, அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவைகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளது. மேலும் கொடைக்கானலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும், உள் மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025