தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதனால் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்கட்சியினர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்று அதிமுக எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனிடையே இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டத் தொடரில் பங்கேற்றனர்.அப்பொழுது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.இறுதியாக மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சட்டப் பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.