#BREAKING: இளைஞர் கொலை – அதிமுக பிரமுகர் கோர்ட்டில் சரண்.!

தட்டார்மடம் செல்வன் கொலைவழக்கில் குற்றச்சாட்டப்படும் அதிமுக பிரமுகர் திருமணவேல் சென்னை கோர்ட்டில் சரண்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் என்பவர் தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17 ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட இருவர் சென்னையில் சரணடைந்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர் என்று தூத்துக்குடி எஸ்.பி தெரிவித்துள்ளார். இதனிடையே, கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வனின் உடலை வாங்க மறுத்து சொந்த ஊரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர் கொலையில் அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025