மகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு…!

இந்தியாவில் பருவமழை காலம் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது மேலும் அந்த வகையில் நேற்று இரவு மும்பையில் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்து என்று கூறலாம்.
இந்த நிலையில் மேலும் இதன் காரணமாக கிங் சர்கிள், உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கோரியன், மலட், ஆண்ட்ரி, ஜொஜேஷ்வரி, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை விடாமல் பெய்தது என்றே கூறலாம்.
மேலும் இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மருத்துவனையில் வெள்ளம் நீர் புகுந்ததால் கொரோனா நோயாளிகள் அவதி பட்டு வருகிறார்கள். மேலும் இந்த நிலையில் மும்பையில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த தாழ்வழுத்த நிலை காரணமாக கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025