#மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் (68) நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025