தங்க கடத்தல் விவகாரம்… கைது செய்யப்பட்ட ஸ்வப்னா ரூ.38 கோடி டெபாசிட்…விசாரனை தீவிரம்…

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா, தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்திருப்பது அமலாக்கத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேபோல், அந்த வங்கியில் ஸ்வப்னாவுக்கு லாக்கர் இருப்பதும் தற்போது விசாரனையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான சந்தீப்புக்கும், ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்திற்கும் அந்த வங்கியில் கணக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்வப்னாவின் கணக்கிற்கு பல பேரிடமிருந்து பணம் வரவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனியார் வங்கியின் மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர், அதில், ‛ அளவுக்கு அதிகமாக பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதால் முதலில் மறுத்தேன். ஒத்துழைக்க மறுத்தால் தங்களுடைய கணக்குகளை முடித்து கொள்வோம் என்று கூறினர். கோடிக்கணக்கில் பணம் புழக்கம் என்பதால் அவர்களுக்கு நான் ஒத்துழைத்தேன்’ இவ்வாறு வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்வப்பனா மற்றும் சந்தீப் வங்கி கணக்குகளில் நடந்த பரிமாற்றங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வங்கி மேலாளரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
July 14, 2025