உலகம் முழுவதும் முடங்கிய டுவிட்டர்… சில நிமிடங்களில் சரிசெய்தது டுவிட்டர் நிறுவனம்…

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தற்போது ஒரு சில நிமிடங்கள் திடீரென முடங்கியதால் அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்ணியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ட்விட்டர் நிறுவனமானது சமூக வலைதளப் பயன்பாடுகளில் முன்னணியில் இருந்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தை உலகம் முழுவதும் பல நூறு மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் இதில் பலதரப்பட்டோரும் தாங்கள் கூற நினைக்கும் கருத்தை ட்விட்டர் மூலம் உலகிற்கு பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை சரியாக 7.30 மணியளவில் ஓரிரு நிமிடங்கள் உலகம் முழுவதும் ட்விட்டர் பக்கம் திடீரென முடங்கியது. இதனையடுத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த முடக்கத்தை அடுத்த சில விநாடிகளில் சீரமைத்துக் கொடுத்தது ட்விட்டர் நிறுவனம். இதனால் முடங்கிய ட்விட்டர் பக்கங்கள் மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.