பள்ளிகள் மூடல்… தனியார்பள்ளி முதல்வர் தேநீர் விற்பனை… அரசு பல ஆசிரியர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டுகோள்…

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தனியார் பள்ளி பெண் முதல்வர், தேநீர் விற்பனை செய்து வருகிறார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 35; இவரது மனைவி செல்வி, 32. இவர், முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார். இவரது கணவர் சிவா நடத்தி வரும் மழலையர் பள்ளியில், முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச், 24 முதல், ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இதனால், வேலை இழந்த இவர், பள்ளிக்கு எதிரே வண்ணாத்திகுட்டை பஸ் ஸ்டாப் அருகில், ஆவின் பாலகம் பெட்டிக் கடையில், டீ விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து செல்வி கூறியதாவது, என் கணவர் நடத்தி வரும், அக் ஷய வித்யாலயா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், முதல்வராக பணியாற்றி வருகிறேன். ஊரடங்கால் பள்ளி மூடி இருப்பதால், போதிய வருவாய் இல்லை.கிராமப்புற மாணவ – மாணவியரின் பெற்றோரால், பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அவர்களை தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை.குடும்ப வருவாய்க்காக, என் மாமனார் நடத்தி வரும் பெட்டிக் கடையில் தினமும், டீ விற்பனை செய்து வருகிறேன். ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வருவாய் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025