13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களுக்கு மழை:-
அந்த வகையில், அரியலூர், தர்மபுரி, திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தஞ்சாவூர், திருவாரூர் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:-
மேலும், சென்னை அதன் சுற்று வட்டார பகுதியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேகம் மூட்டத்துடன் காணப்படும், ஆனால் நகரின் ஒரு பகுதியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025