எச்சரித்துள்ள வைகோவிற்கு நன்றி – திருமாவளவன் ட்வீட்

உண்மையைத் திரிக்கும் சனாதனிகளையும், துணைபோகும் ஆட்சியாளர்களையும் எச்சரித்துள்ள வைகோவிற்கு நன்றி என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தவறான கருத்துகளைத்தான் சுட்டிக்காட்டி இருக்கின்றார் – வைகோ
திருமாவளவன் பெண்களை மதிப்பவர்,பண்பாடு நிறைந்தவர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மேலும், அவர் கூறுகையில் ,மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அதை வேறுவிதமாகத் திரித்து, அவர் மீது, சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர்.உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் , இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், உண்மையைத் திரிக்கும் சனாதனிகளையும் அவர்களுக்குத் துணைபோகும் ஆட்சியாளர்களையும் எச்சரித்துள்ள- கண்டித்துள்ள அண்ணன் வைகோ அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.
#Warning: உண்மையைத் திரிக்கும் சனாதனிகளையும் அவர்களுக்குத் துணைபோகும் ஆட்சியாளர்களையும் எச்சரித்துள்ள- கண்டித்துள்ள அண்ணன் @MDMKVaiko வைகோ அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி. #BanManu pic.twitter.com/e4NWQOsTLl
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 24, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025