8 மாதங்களுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!

8 மாதங்களுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுலா தலமான ஒகேனக்கல் அருவியில் குளிக்க கொரோனா காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், மசாஜ் செய்யவும், சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல்களை இயக்கவும் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 8 மாதங்களுக்கு பின்னர் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சொந்த வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே ஒகேனக்கல் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அருவியில் குளித்தும், பரிசலில் பயணம் செய்ததும் தங்களது விடுமுறையை பயணிகள் கொண்டாடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025