திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி போராட்டம் – எல்.முருகன்

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். திருமாவளவனுக்கு ஆதரவாகவும் ஒரு சில அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் , திருமாவளவன் பேசியதை கண்டித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் வரும் செவ்வாய்க்கிழமை பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025