விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ் ?

தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐஏஎஸ் விண்ணப்பித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் மற்றும் கனிம மணல் ஊழல் பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தவர் சகாயம்.மக்கள் பாதை என்ற அமைப்புடன் சேர்ந்து சகாயம் சமூக சேவையாற்றி வருகிறார்.
இவர் தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.சுமார் 6 வருடமாக இந்த பதவியை வகித்து வருகிறார். 57 வயதாகும் இவர் இந்த அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற ஏறக்குறைய 3 ஆண்டுகள் உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் விண்ணப்பித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025