அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப்!

அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளருக்கு பதிலளித்த அமேசான் நிறுவனம்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் மக்கள் பொருட்களை வாங்க பிரமாண்டமான கட்டடங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், பலரும் ஆன்லைன் மூலமாக தான் பொருள்களை வாங்குகிறார்கள். இதனால் ஏமாந்தவர்கள் பலர் இருக்கின்றனர். சிலருக்கு நியாயம் கிடைத்தாலும் பலருக்கு கிடைப்பதில்லை. தற்பொழுது டெல்லியை சேர்ந்த அமேசான் பயனர் ஒருவர் தனது பழைய மொபைலை கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்சு ஆஃபரில் புதிய போனை ஆர்டர் செய்துள்ளார்.
டெலிவரி பாய் ஆர்டர் செய்த பார்சலை கொடுத்ததும் தனது பழைய போனை கொடுத்துள்ளார். பின் வீட்டுக்குள் வந்து பார்சலை பிரித்து புதிய போன் உள்ளது என ஆவலில் பார்த்தால் ரின் சோப்பு உள்ளே இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அமேசானை டேக் செய்து தவறான பார்சல் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்க்கு அமேசான் நிறுவனமும், அந்த சோப்பை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு அனுப்பட்ட தவறான பார்சலுக்கு பதிலாய் 4-5 நாளுக்குள் போனை அனுப்புகிறோம் என கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025