தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்.!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை அடுத்து தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஈக்காட்டுதாங்கல், மெரினா, நந்தனம், மந்தவெளி, வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்கில் இருந்து மீண்டும் பருவக்காற்று வீச தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கும் மேலும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025