‘#GoBackEps’ – இந்த மண்ணும் மக்களும் உங்களை என்றும் மன்னிக்க மாட்டார்கள்! – உதயநிதிஸ்டாலின்

இந்த மண்ணும் மக்களும் உங்களை என்றும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய் வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பலாகி சூடு சம்பவம் குறித்து கனிமொழி அவர்கள் ட்வீட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசுடன் இணைந்து 13 உயிர்களை கொன்று குவித்துவிட்டு, ‘டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என்று நடித்தீர்களே..! இந்த மண்ணும் மக்களும் உங்களை என்றும் மன்னிக்க மாட்டார்கள் தமிழக முதல்வர் அவர்களே!’ என்று பதிவிட்டு ‘#GoBackEps’ என டேக் செய்துள்ளார்.
மத்திய அரசுடன் இணைந்து 13 உயிர்களைக் கொன்று குவித்துவிட்டு ‘டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என்று நடித்தீர்களே… இந்த மண்ணும் மக்களும் உங்களை என்றும் மன்னிக்க மாட்டார்கள் @CMOTamilNadu அவர்களே! #GoBackEPS pic.twitter.com/F8avv3OT6g
— Udhay (@Udhaystalin) November 11, 2020