1996-ஆம் ஆண்டு ரஜினி கொடுத்த வாய்ஸ் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது – வைகோ ..!

புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தார்.
ரஜினி கட்சி தொடங்குவதற்கு தொடங்குவது யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை கூற முடியாது. 1996-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தல் ரஜினி களத்தில் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் வைகோ தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தை காயப்படுத்தும் வகையில் யார் மீம்ஸ் போட வேண்டாம். நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியன் உள்ளிட்டோர் மீது அவர்களது குடும்பத்தினர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். திராவிட இயக்கங்களை சிதைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன.
வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என நினைக்கிறேன் என வைகோ தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025