நேற்று ஒரே நாளில் எத்தனை கோடிக்கு மது விற்பனை என தெரியுமா?

2021- On the occasion of the English New Year, liquor worth Rs. 159 crore was sold in Tamil Nadu on the same day yesterday.

2021- ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழகஅரசு நேற்று அறிவித்திருந்தது. அதேசமயம் கொரோனா நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தது. இதனிடையே, தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2021- ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை ரூ.48.75 கோடி, கோவை 28.40 கோடி, திருச்சி ரூ.28.10 கோடி, மதுரை ரூ.27.30 கோடி, சேலம் ரூ.26.49 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.159 கோடினா? இன்று எவ்வளவு இருக்கும் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.