இன்றைய (16.01.2021) நாளின் ராசிபலன்கள்!

ரிஷபம்
இன்று மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும். இதன் மூலம் உங்களது கனவுகள் நிறைவேறும். உங்களது நண்பர்கள் மற்றும் உடன் இருப்பவர்கள் ஆதரவை பெற்றுக் கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களது லட்சியம் நிறைவேறும் நாளாக காணப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உண்மையான அன்பை பகிர்ந்து கொள்வீர்கள்.
மிதுனம்
இன்று சாதகமான பலன்களை காண்பதற்கு உகந்த நாளாக அமையும். அதிர்ஷ்ட வாய்ப்பு குறைவாக காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கடகம்
இன்றைய நாளில் அனுகூலமான பலன்கள் கிடைக்காது. சில சமயங்களில் உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு தோன்றும். எனவே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும்.
சிம்மம்
இன்று முன்னேற்றகரமான பலன்கள் இருக்கும். உங்களின் தொடர் முயற்சி மூலம் நீங்கள் வெற்றியடைவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள்.
கன்னி
இன்று சாதகமான சூழ்நிலை காணப்படும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மை அளிக்கும். இன்று ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.
துலாம்
இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளில் பங்கு கொள்வது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும்.
விருச்சிகம்
இன்று சில அசௌகரியங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். பதட்டத்தை தணிக்க இசை கேட்பது, திரைப்படம் பார்த்த போன்ற நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். பணவரவு குறைவாக காணப்படும்.
தனுசு எதிர்பாராத நன்மைகள் கிட்டும். நீங்கள் கவனமாகவும், விழிப்புடனும் உங்களது இலக்கை அடைவீர்கள். வேலை பொறுப்பு உங்களிடம் காணப்படும்.
மகரம்
இன்று சம்பவங்கள் சீராக நடைபெற அனுசரணையான அணுகுமுறை தேவை. எனவே உங்கள் செயல்களில் விவேகம் காணப்பட வேண்டும். பணவரவு மகிழ்ச்சிகரமாக இருக்காது.
கும்பம்
இன்று உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படலாம். இதனால் உங்களுக்கு வருத்தமும், பதட்டம் அமைதியின்மையும் ஏற்படும். மன அமைதியைப் பெற பிரார்த்தனை மற்றும் தியான மேற்கொள்ள வேண்டும்.
மீனம்
இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்காது. உங்கள் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும் வகையில் இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் உங்கள் மேலதிகாரியிடம் பேசும்போது அனுசரித்துச் செல்லவேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025