கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பாக மாட்டு பொங்கல் விழா இன்று(ஜனவரி 15) கோலாகலமாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவிவசாயிகள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு மண் பானையில் பொங்கல் வைத்து உழவுக்கு உதவும் மாடுகளுக்குநன்றி கூறினர்.
unknown nodeஈஷாவில் வளர்க்கப்படும் காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர்உள்ளிட்ட பல்வேறு ரக நாட்டு மாடுகள் மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசிஅலங்கரிக்கப்பட்டு கண்காட்சியாக நிறுத்தப்பட்டு இருந்தன. ஈஷாவில் அழிந்துவரும் 23 நாட்டு மாடு இனங்கள் பராமரிக்கப்பட்டு வளர்த்து வரப்படுகிறது.பொங்கலிடுதலை தொடர்ந்தது கலை நிகழ்ச்சிகளும் சத்குருவின் சிறப்புசத்சங்கமும் நடைபெற்றது. தேவார பாடல்களுடன் துவங்கிய கலைநிகழ்சிகளில் பாரம்பரிய நாட்டுபுற தமிழ் பாடல்களும் நடனங்களும் இடம்பெற்றன,
இதில் சத்குரு பேசியதாவது:
பொங்கல் விழா என்பது தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஒரு விழா ஆகும்.இவ்விழா விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் சம்பந்தப்பட்டது. அதேபோலஉணவுக்கும், உணவுக்கு மூலமான மண்ணுக்கு, நீருக்கு, விலங்குகளுக்குஎல்லாம் சம்மந்தபட்டது. அதனால் இதை உயிர்களின் விழா என்று சொல்லமுடியும். மேலும் இவ்விழா குறிப்பிட்ட கடவுள் அல்லது மதம் சார்ந்த விழாஅல்ல.
unknown nodeஇந்த கொரோனா பெருந்தோற்றால் உலகம் முழுவதும் பெருமளவில் உயிரிழப்புஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கையைமற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக மிக குறைவாகும். இதற்கு நம் தமிழ்மக்களின் உணவு முறையும், வாழ்வியலும் காரணமாக இருக்கலாம் எனநினைக்கிறன். இதனை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.
ஈஷா யோகா மையத்தில் 4200 பேர் இருந்தாலும் இதுவரை ஒருவர் கூடகொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதேபோல் கூடிய விரைவில்தமிழகம் முழுவதும் கொரோனா இல்லாத சுழல் உருவாக வேண்டும்.
unknown nodeதமிழகம் முழுவதும் கூடிய விரைவில் சூர்ய சக்தி என்ற யோகா பயிற்சியைஇலவசமாக கற்றுக்கொடுக்க உள்ளோம். இதற்காக 7000 யோகா ஆசிரியர்கள்தயாராக உள்ளனர். இந்தப் பயிற்சியின் மூலம் உடலில் தெம்பும் மனதில்தெளிவும் ஏற்படும். இப்பயிற்சியை 8 வயதிற்கு மேல் உள்ள எல்லாருக்கும் இந்தயோகா பயிற்சி சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பம். குறிப்பாக தமிழகஇளைஞர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.