மாணவியை பிரச்சார வாகனத்தின் மீது ஏற்றி செல்ஃபி எடுத்துக் கொடுத்த ராகுல் காந்தி!

Default Image

கரூரில் செல்பி எடுக்க முயன்ற மாணவியை தனது பிரச்சார வாகனத்தின் மீது ஏற்றி செல்பி எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அனைத்து கட்சியினரும் தங்களது அனல்பறக்கும் பரப்புரையை செய்து வருகின்றனர். 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் இன்று ராகுல்காந்தி கரூர் சின்னதாராபுரத்தில் தேர்தல் பரப்புரையின் போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், 56 அங்குல அகலம் மார்பளவு உள்ளதாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, சீனா என்ற வார்த்தையை சொல்ல பயப்படுகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார். நாட்டு மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று தெரிவித்தார்.

இந்திய பகுதிகளை சீன ராணுவத்துக்கு பிரதமர் மோடி தாரவாத்து வருவதாகவும், சீனாவிடம் எல்லை பிரச்சனை தொடர்பாக பேச மோடிக்கு தைரியமில்லை என்றும் குற்றசாட்டியுள்ளார். சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவி வரும் நிலையில், கடந்த 5 மாதங்களாக சீனா என்ற வார்த்தையை மோடி உச்சரிக்கவே இல்லை எனவும் விமர்சித்துள்ளார். இதனிடையே, செல்பி எடுக்க முயன்ற மாணவியை தனது பிரச்சார வாகனத்தின் மீது ஏற்றி செல்பி எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்