பொதுத்தேர்வு மாற்றங்கள் தொடர்பாக விரைவில் அறிவிப்பு -அமைச்சர் செங்கோட்டையன்..!

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. இதையடுத்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு வழக்கமாக மார்ச் மாதம் தொடங்கும் என்பதால் மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வு எப்படி இருக்கும்..? பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா..? போன்ற பல்வேறு பல சந்தேகங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மாற்றங்கள் இருக்கும். இந்தாண்டு பொதுத்தேர்வு பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பது போன்று எளிமையான வகையில் வினாத்தாள் இருக்கும்.
பொதுத்தேர்வு மாற்றங்கள் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025