சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டுவதற்கு முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ள காமெடி நடிகர் விவேக்!

திருவெற்றியூர் பாதைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் சூட்டுவதற்கு முதல்வரை சந்தித்து நடிகர் விவேக் மனு அளித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வரக்கூடிய விவேக் அவர்கள் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவரிடம் ஒரு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே வருகிற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா நட்சத்திரங்களை களம் இறக்க அதிமுக முடிவு செய்து இருப்பதாலும், இதற்காக பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் விவேக்கும் அரசியலில் தான் குதிக்க போகிறாரோ எனப் பேச்சுகள் எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் தெளிவாக கூறியிருக்கிறார். அதன்படி அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது எனது சொந்த காரணங்களுக்காகவோ நான் முதல்வரை சந்திக்கவில்லை. 33 ஆண்டுகள் நடந்துசென்று வடிவுடை அம்மனை வணங்கிய தமிழ் துறவி அருட்பா தந்த வள்ளலார் அவர்களின் பெயரை திருவொற்றியூர் பாதைக்கு சூட்டி வள்ளலார் நெடுஞ்சாலை என்று வைக்குமாறு கோரிக்கை மனு அளித்தேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025