தியேட்டரில் மிரட்ட வரும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’.! ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தினை வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளார்.செம்மரக்கடத்தல் விவகாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் மரத்தை வெட்டுபவராக அல்லு அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள து.
புஷ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானதும்,கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மரேடுமிலி காடுகளில் நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.அதாவது புஷ்பா படத்தினை வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#PUSHPA loading in theatres from 13th August 2021. Excited to meet you all in cinemas this year.Hoping to create the same magic one more time with dearest @aryasukku & @ThisIsDSP .@iamRashmika @MythriOfficial #PushpaOnAug13 pic.twitter.com/tH3E6OpVeo
— Allu Arjun (@alluarjun) January 28, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025