இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் காணொலி வாயிலாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்பொழுது நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது, 20 க்கும் மேற்பட்ட கட்சியினர் குடியரசு தலைவரின் உரையையும் புறக்கணித்தனர். இந்நிலையில் இதனை அடுத்து இன்று பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் இடம் பெறக்கூடிய சட்ட தீர்மானங்கள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட இருப்பதாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து எதிர் கட்சிகளிடமும் பிரதமர் கேட்டுக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025