வாய் துர்நாற்றத்தை முற்றிலும் நீக்கும் அத்திப்பழம் குறித்து அறியலாம் வாருங்கள்!

பல்வேறு சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ள அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது, அவைகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
அத்திப்பழத்தின் நன்மைகள்
அத்திப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் புரோட்டீன், சர்க்கரை ஆகியவை நிறைந்திருப்பதால் தினமும் இரண்டு அத்திப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் மெல்லிதாக இருக்கிறோம் என வருத்தப்படுபவர்கள் நிச்சயம் தினசரி இரண்டு பழங்களை எடுத்துக்கொள்ளலாம், விரைவில் நீங்கள் விரும்பக்கூடிய உடல் அழகைப் பெறலாம். மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதற்கு அத்தி பழத்தின் விதைகள் மிகவும் உதவுகிறது. மேலும் அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடும் பொழுது வாய் துர்நாற்றம் முற்றிலுமாக நீக்க உதவுகிறது. வெட்டை நோய் எனப்படும் நோயை முற்றிலுமாக விரட்டக் கூடிய தன்மை இப்பழத்திற்கு உள்ளது.
வினிகரில் ஒரு வாரம் அத்திப் பழத்தை ஊற வைத்து தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது போதை பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் பிரச்சினை முற்றிலும் குணமடையும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற வாய் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க உதவுவதற்கு அத்திப்பழத்தின் இலைகள் மிகவும் உதவுகிறது. மேலும் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க அத்திப்பழம் மிகவும் உதவுவதுடன் சிறுநீர்பை, சிறுநீர் பையில் ஏற்படக்கூடிய கல்லை நீக்கவும் உதவுகிறது. வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு வலுவான உடல் ஆரோக்கியத்தை கொடுக்க உதவுவதுடன், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, மன அழுத்தம் போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகவும் உதவுகிறது. அத்திப் பழத்தை சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டு வரும்பொழுது மூல நோய் உள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள். மேலும் பித்தம் மற்றும் பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கும் குணமளிக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025